ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

Saturday, September 12, 2009

காயத்ரி மந்திரம்




காயத்ரி மந்திரம்

' ஓம் பூர் புவஸ் ஸுவ :
தத் ஸவிதுர் வரேண்யம்  
பர்கோ  தேவஸ்ய தீமஹி  
தியோ யோந : ப்ரசோத யாத் '




பிரணவ மந்திரமான "ஓம்" என்ற வார்த்தைக்கு அடுத்தபடி இந்தக் காயத்ரி மந்திரம் தான் சொல்லப் படுகிறது. பர பிரம்மத்தின் ஸ்வரூபமான இந்த மந்திரத்தின் அதி தேவதையான காயத்ரி மாதா, மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் சேர்ந்த உருவமாகப் போற்றப் படுகிறாள். விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப் பட்டதான இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. வேதமாதாவான காயத்ரியை ப்ரப்ரும்ம சொரூபம் என்ற அளவில் மட்டுமில்லாமல், ஆத்ம ஞானத்தைக் கொடுக்கும் ஒரு சக்தியாகவும் கருதுகிறார்கள்.
செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் காயத்ரி தேவி செல்வத்துக்கு அதிபதியாகவும் கருதப் படுகிறாள். ஐந்து தலைகளுடனும், பத்துக் கண்களுடனும், எட்டுத் திசைகள் மட்டுமின்றி, ஆகாயத்தில் உதிக்கும் சூரிய, சந்திரரையும், கீழே பூமியையும் பார்க்கும் விதமாக இருக்கும் காயத்திரியின் , பத்துக் கரங்களும், அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கும். வெண்ணிற அன்னத்துடன் இருக்கும் இவளை வணங்கினால் அறிவு வளரும் எனவும், கல்விக்கும் இவள் அதிபதி எனவும் சொல்கிறார்கள். மேலும் இவளின் மூல மந்திரத்தை ஜெபிக்கும் முறைப்படி ஜெபித்து வந்தால் மனதில் அதைரியம் மறைந்து எதையும் எதிர்நோக்கும் மனம் தானாகவே ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். மனதில் தெய்வீக சக்தி அதிகரித்து, புத்தியும், மனமும் இணைந்து ஆத்ம ஞானத்தை அறிய முற்பட இந்த மந்திரம் உதவுகிறது.
முக்கியமாக மனச் சஞ்சலம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து வருவதால் மனச் சஞ்சலம் மறைந்து மன உறுதி தோன்றுவது நிச்சயம்.
"இவ்வுலகைப் படைத்த அந்த பிரபஞ்ச சக்தியைப் போற்றுவோம்! நம்முடைய மன இருள் அகன்று ஒளி பிறக்கட்டும்" என்பதே இதன் அர்த்தம். "ஓம்" என்னும் வார்த்தை, ஆரம்பத்திலும் முடிவிலும் சேர்க்கப் படும்


எல்லா பிராணிகளின் இதயத்தில் அந்தர்யாமியாய் இருந்துகொண்டு புத்தியைத் தீட்டிக்கொடுப்பவளும் சூரியமண்டலத்தில் இருந்துகொண்டு வெளிச்சம் கொடுப்பதால் யாவரும் சேவிக்க வேண்டியவளாகவும் விள்ங்குகின்ற காயத்ரியைத் தியானம் செய்கிறேன்.



No comments:

Post a Comment